வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டில் 16, 17-ந் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு




தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை பெய்யக்கூடிய இயல்பான மழை அளவை விட 2 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.இதன் தொடர்ச்சியாக இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதற்கிடையில், வடமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகி இருக்கிறது என்றும், இது அடுத்த 3 நாட்களில் ஒடிசா மற்றும் அதனையொட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த தாழ்வு பகுதி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் வருகிற 16 (சனிக்கிழமை) மற்றும் 17 (ஞாயிற்றுக்கிழமை)-ந் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் வானூர் 9 செ.மீ., முகையூர் 7 செ.மீ., வெங்கூர், அரியலூர், கொள்ளிடம் தலா 5 செ.மீ., திருக்கோவிலூர், கீழ் அணைக்கட்டு, மணம்பூண்டி, கஞ்சனூர், நெமூர், சூரப்பட்டு தலா 4 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments