தில்லைவிளாகம் இரயில் நிலையம் செல்லும் பாதையில் மின் விளக்க அமைக்க தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை





திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை ஒன்றியம்தில்லைவிளாகம் இரயில் நிலையம் செல்லும் பாதையில் மின் விளக்க அமைக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாச்சிகுளம் கிளை செயற்குழுக் கூட்டம் கிளை செயலாளர் றிரிவி அலாவுதீன் தலைமையில் 15/09/23 நாச்சிகுளம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.இதில் தில்லைவிளாகம் இரயில் செல்லும் பாதையில் இரவு நேரங்களில் பயணிகள் இரயில் நிலையத்திற்கு செல்வதற்கும் இரயில்வே பணியாளர்கள் பணி முடிந்து வருவதற்கு மின் விளக்கு இல்லாமல் மிக சிரமாக உள்ளது.
ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் இரவு நேரத்தில் அமர்ந்து மது அருந்துபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

எனவே இரயில்வே நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு தில்லைவிளாகம் இரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையில் உடனடியாக மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும் என இச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் கிளை துணை செயலளார் கல்பான் மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன் மாவட்ட துணை தலைவர் அஸாரூதீன் மாவட்ட பேச்சாளர் யூசுப்கான் மற்றும் கிளை உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments