ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே வேள்வரை ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு 4-வது ஆண்டாக மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 45 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 35 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டு எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன.
கொடிப்பரிசு
பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மேலும் மாட்டு வண்டிகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
சாலையில் இருபுறமும் நின்று பந்தயத்தை பொதுமக்கள் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் இளைஞர் நற்பணி மன்றத்தினரும், கிராம மக்களும் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.