கோபாலப்பட்டிணம் - மீமிசல் பகுதியில் வறண்டு நிலையில் இருக்கும் அலையாத்திக் காடுகள்




கோபாலப்பட்டிணம் - மீமிசல் பகுதியில்  வறண்டு நிலையில் இருக்கும் அலையாத்திக் காடுகள்

மழை போதிய அளவு இல்லாததால்   கோபாலப்பட்டிணம் - மீமிசல் பகுதியில் அலையாத்திக்காடுகள் வறண்டு வருகின்றன. இதனால் பறவைகள் வெளியேறும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் - மீமிசல் பகுதியில் கடற்கரைப்பகுதியை ஒட்டி அலையாத்திக்காடுகள் உள்ளன. இந்தக்காடுகள் சுனாமி மற்றும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து கடற்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. மேலும் அலையாத்தி மரங்களின் உதிர்ந்த இலைகள் மக்கி கடலில் கலப்பதால் இறால் மற்றும் பிற மீன்களுக்கு உணவாக பயன்பட்டு மீன் இனப்பெருக்கம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த அலையாத்திக்காடுகள் கடற்கரை ஓரங்களில் அணிவகுத்து காணப்படுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக அமைந்துள்ளது. 

இந்த அலையாத்திக்காட்டு பகுதிகளில் . ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதல் மழை தொடங்கி தொடர்ந்து பெய்யும் தருவாயில் அலையாத்திக்காட்டுப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி கடும் குளிருடன் பறவைகளுக்கு ஏற்ற இயற்கை சூழல் காணப்படும். பல்வேறு வகையான பறவைகள் வரத்து தொடங்கும். பின்னர் இந்தநிலையில்  இதைப்போல அலையாத்திக்காடுகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருந்தது. இதனால் பறவைகள் பெரும்பாலும் இப்பகுதி முகாமிட்டு இருந்து வந்தது. 

அலையாத்திக்காடுகளில் உள்ள நீர்நிலைகளில் போதிய மழை இல்லாததால்  பறவைகள் பறந்து விளையாடும் ரம்மியமான காட்சிகளை தற்போது பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments