தஞ்சாவூர்: சார்ஜ் போட்டுக்கொண்டே Cellphone உபயோகம்... மின்கசிவில் ஃபோன் வெடித்து பெண் உயிரிழப்பு!கபிஸ்தலத்தில் செல்ஃபோன் மற்றும் வாட்ச் பழுது பார்க்கும் கடையில் மின் கசிவு காரணமாக பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆடுதுறை விசித்திரராஜபுரத்தில் வசித்து வருபவர் கோகிலா (32). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தனது மகன் பிரகதீஷ் (9) உடன் தனியாக வசித்து வந்திருக்கிறார் இவர். கபிஸ்தலத்தில் பிரகதீஷ் என்ற பெயரில் செல்ஃபோன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடையை நடத்தி வந்துள்ளார் கோகிலா. வழக்கம்போல இன்றும் கடைக்கு வந்தவர், தனது பணிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.

செல்ஃபோன் வெடித்து விபத்து
அப்போது செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசியதாக கூறப்படுகிறது. அச்சமயத்தில் மின்கசிவு ஏற்பட்டு செல்ஃபோன் வெடித்து கடை முழுவதும் பரவியுள்ளது.

இதில் கடை தீ பற்றி எரிந்தது. கடையின் உள்ளே இருந்த கோகிலா கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் கோகிலா தீயில் சிக்கி உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கபிஸ்தலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments