புதுக்கோட்டை வேலைவாய்ப்பு மையத்தில் போலீஸ் தேர்வு பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு!புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது.

இவ்வட்டத்தின் சார்பாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் 2-ம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,359 காலிப்பணியிடம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இத்தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 5-ந் தேதி தொடங்கப்படவுள்ளது. எனவே இத்தேர்விற்கு, தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அணுகி பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments