புதுக்கோட்டை நகர TNTJ கிளை 2 ன் சார்பாக இஸ்லாமியர்கள் மார்க்க விழிப்புணர்வு கேள்விபதில் நிகழ்ச்சி




புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகர கிளை 2 ன் சார்பாக 1-10-23 அன்று  இஸ்லாமியர்கள் மார்க்க விழிப்புணர்வு கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் மீரான்மைதீன், மற்றும் ரபீக் ராஜா,  தலைமை வகித்தனர்.

இதில் கிளை தலைவர்  பீர் முகம்மது ,செயலாளர் ரகுமத்துல்லா,பொருளாளர் காதர்,துணை தலைவர் அப்துல் ரகுமான் ரவுப், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பேச்சாளர்  அப்துர் ரஹ்மான் MISC அவர்கள் மக்கள் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்அளித்தார்.

 மாவட்ட மாணவரனி மைதீன் DIC அவர்கள் நன்றி கூறினார்.

இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாஜக எம்.பி ரமேஷ் பிதுரியை தகுதி நீக்கம் செய்க

1. சமீபத்தில் நிறைவுற்ற சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் இந்திய ஜனநாயகம் வெட்கி தலைக்குனியக்கூடிய வேலையை பாஜகவின் , தெற்கு டில்லியின் MP
ரமேஷ் பிதுரி செய்துள்ளார், தனது நாடாளுமன்ற உரையில் பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டானிஷ் அலியை தெருக்களில் சங்கபரிவாரங்கள்
புலங்கும் மோசமான வார்த்தைகளில் திட்டியுள்ளார், அவர் சார்ந்துள்ள இஸ்லாமிய மதத்தை குறிக்கும் வகையிலும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
இவர் இவ்வாறு நான்காம் தரமாக நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது பிஜெபியின் முன்னாள் அமைச்சர்களும் முக்கிய தலைவர்களுமான
ஹர்ஷ்வர்தன் மற்றும் ரவிஷங்கர் பிரசாத் ஆகியோர் சிரித்து ரசித்து கொண்டிருந்தனர், காங்கிரஸின் உறுப்பினர் சபாநாயகராக இதை கட்டுப்படுத்த முயற்சித்தும்
தொடர்ந்து அந்த வார்த்தைகளை பயன்படுத்தினார், வட இந்தியாவில் முஸ்லிம்கள் இன்று தினந்தோறும் சந்திக்கும் ஒரு பிரச்சினையாக இது போன்ற வசை சொற்கள்
மாறிவிட்ட நிலையில் தனது முகமூடியை மறந்து ஒரு பிஜெபி MP நாடாளுமன்றத்திலேயே இவ்வாறு பேசி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் டோன்க் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார், 

இவரின் இப்பேச்சை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கிறது, மேலும் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் கூடுதல் பொறுப்புகளையும் வழங்கும் பிஜெபியின் நடவடிக்கை வெட்கக்கேடானது இவரை நாடாளுமன்றத்திலிருந்து சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வதோடு ,மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதால் கைது நடவடிக்கைகளுக்கும் பரிந்துரைக்க வேண்டும் என இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.


நீண்டகால முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்க

2. தமிழக சிறை வாசிகள் ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.   ஆனால்  நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் மட்டும் விடுதலை செய்யப்படுவது இல்லை.
அறிஞர் அண்ணாபிறந்த தினத்தை முன்னிட்டு சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதற்காக உரிய பட்டியலை ஆளுநருக்கு அனுப்பி உள்ளதாக 
அறிகிறோம் , இம்முனெடுப்பு பாராட்டுக்குரியது அதே நேரத்தில் இறுதி வரை இச்சிறைவாசிகளின் விடுதலைக்காக உரிய முயற்சிகளை எடுத்து அவர்களின் விடுதலைய உறுதி செய்ய வேண்டும் என இக்கூட்டம் வாயிலாக 
கேட்டுக்கொள்கிறோம். 

சிறைச்சாலைகளில் நோயினால் பாதிக்கப்பட்டு சில இஸ்லாமிய சிறைவாசிகள் மரணமடைந்துள்ள வேளையில் , மீதம் உள்ளவர்களையாவது விடுதலை செய்து சமநீதியை நிலைநாட்ட உறுதியான 
நடவடிக்கைகளை ஆளும் திமுக அரசு எடுக்க வேண்டும், வழக்கம் போல் ஆளுநர் மீது பழி போடாமல் நீட் விவாகரத்தில் எவ்வாறு ஆளுநரை எதிர்த்து பணிகள் நடைபெறுகிறதோ அது போன்று 
இவர்களை நியாயமான முறையில் விடுதலை செய்வதற்கான சட்ட முன்னெடுப்புகளை துரிதப்படுத்த வேண்டும் என இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். 


இடஓதுக்கீட்டை உயர்த்துக ! , வெள்ளை அறிக்கை வெளியிடுக

3. தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு நடைமுறையில் இருக்கும் கல்வி வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.மூன்றரை சதவீத இடஒதுக்கீடு முறையாக பல துறைகளில் வழங்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது,  மதம் மாறி இஸ்லாத்தை தழுவியர்களுக்கு இட ஒதுக்கீடு சரியாக வழங்கப்படாமல் அலைக்களிக்கப்படுகின்றனர்
ரோஸ்டர் முறையில் சரியான வரிசை முறைப்படி இஸ்லாமியர்கள் பயன்பெற முடிவதில்லை. இஸ்லாமியர்களின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு குறைவு. இதில் பல குளறுபடிகளும் உள்ளன
தமிழக அரசு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அனைவரும் தெளிவாக அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தமிழகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து விகிதாச்சார பிரிநிதித்துவ முறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் , தமிழகத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை
7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என இந்த  வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

 
சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி பறிப்பு

4. ஒன்றிய அரசின் சிறுபான்மை நலத்துறையின் சார்பாக வழங்கப்படும்   Post Metric Scholarship ஐ பெறுவதற்கு BIO metric முறையில் தங்கள் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும்
 என இறுதி நேரத்தில் ஒன்றிய அரசின் சார்பாக வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது, இந்த புதிய வழிமுறையால் ஏறக்குறைய 20 இலட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு சிறுபான்மை மாணவர்களான
 இஸ்லாமிய, கிறித்தவ, சீக்கிய , பவுத்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதைப்போன்று சுமார் 830 போலி கல்வி நிறுவனங்கள் மூலம் சுமார் 144 கோடி ரூபாய் வரை சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது , இது குறித்து CBI விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள இச்சூழலில் சிறுபான்மை மாணவர்களை பாதிக்கக்கூடிய வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

5. புதுக்கோட்டை மாவட்டம் சுப்பிரமணி நகர்,கோல்டன் நகர்,திருவள்ளுவர் பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதால் அதை  சீரமைத்து தருமாறும் மேலும்
தெரு நாய்களின் தொல்லைகள் அதிகமாக உள்ளதால்  இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மீது வெறிநாய்கள் கடித்து விடுகிறது ,மேலும் வாகனங்கள் குறுக்கே வந்து விபத்துகள் ஏற்படுத்துகிறது ஆதலால் நாய்களின் இணப்பெருக்கத்தை கட்டுபடுத்தி மக்களை பாதுகாக்குமாறு நகராட்சி நிர்வாகத்தை இக்கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

6.புதுக்கோட்டை மார்தாண்டபுரம் பகுதியில் கழிவுநீர் செல்ல பாதளசாக்கடை வேலை மிகவும் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் கழிவுநீர் செல்லாமல் குளம்போல் தேங்கிநிற்க்கிறது இதனால் இப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது ஆதலால் உடணியாக வேலைகளை விரைவுபடுத்துமாறு இக்கூட்டம் வாயிலாக. கேட்டுக்கொள்கிறோம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments