தமிழ்நாட்டில் 8-ந்தேதி முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்




தமிழ்நாட்டில் ஆங்காங்கே கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் கன்னியாகுமரி உள்பட தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதேபோல், வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு, அதாவது வருகிற 11-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments