கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கிளாம்பாக்கம் ரயில் நிலையம்! 3 பிளாட்பார்ம் வசதி; ரூ20 கோடியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்: டெண்டர் கோரிய தெற்கு ரயில்வே
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.20 கோடியில் புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஒப்பந்தத்தை தெற்கு ரயில்வே கோரியுள்ளது.


சென்னை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலைய பணிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே, பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிரே ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படுவதற்கு தெற்கு ரயில்வே டெண்டர் கோரியுள்ளது.

இந்த ரயில் நிலையம் புறநகர் ரயில்கள் நின்றுசெல்லும் வகையில் மூன்று நடைமேடைகளுடன் அமைய உள்ளது. புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஒரு ஆண்டிற்குள் முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments