சென்னை - கன்னியாகுமரி ஈசிஆர் 4 வழிச் சாலை பணிகள்: எந்த நிலையில் இருக்கு?..
தமிழகத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான சென்னை கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் எந்த அளவில் உள்ளது என்பது குறித்த அப்டேட் வெளியாகி சென்னைவாசிகளை உச்சிகுளிர வைத்துள்ளது. முழு தகவல்களை தெரிந்து கொள்ள இச்செய்தி தொகுப்பை தொடர்ந்து படியுங்கள்.
சென்னை ஈசிஆர் 4 வழிச் சாலை பணிகள்
தமிழகம் முழுவதும் முக்கிய வழித்தடங்களில் மேம்பாலங்கள், நான்கு வழி சாலைகள் மற்றும் ஆறு வழிச்சாலைகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள்:

அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய சாலைகளில் ஒன்று சென்னையில் இருக்கும் கிழக்கு கடற்கரை சாலை. இந்த நிலையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 694 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிழக்கு கடற்கரை சாலையை ரூபாய் 24,435 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

எந்த நிலையில் இருக்கு?

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் (ஈசிஆர்) போக்குவரத்து அதிகரித்துள்ளதால் மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில பாதி பணிகள் முடிக்கப்பட்டுள்ளதுதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதில் முதல் கட்டமாக தற்போது மரக்காணம் மற்றும் புதுச்சேரி இடையே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான விரிவாக்கத் திட்டத்திற்காக என்எச்ஏஐ (NHAI) ஒரு தனியார் நிறுவனத்தை வாடகைக்கு டெண்டர் எடுத்துள்ளது.

மேலும் மாமல்லபுரம்-மரக்காணம் இடையே பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 675 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு 4வழிச் சாலையாக மாற்றப்பட உள்ளது.

மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரை மும்முரமாக நடைபெற்று வரும் இந்த நான்கு வழிச்சாலை பணிகளில் தேவையான இடங்களில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கான கிரேடு பிரிப்பான்கள், இணைப்பு சாலைகள், சுரங்க பாதைகள் மற்றும் மேம்பாலங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் ஹைலைட்டாக பணிகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பெரிய அளவில் வளைவுகள் இல்லாமல் நேராக செல்லும் வகையில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

பணிகள் எப்போது முடியும்?

மொத்தம் உள்ள 675 கிலோ மீட்டரை 8 பிரிவுகளாக பிரித்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது இதில் தற்போது புதுச்சேரி முதல் கடலூர் பூண்டியாங்குப்பம் வரையிலான 38 கிலோமீட்டர் சாலை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் வரும் நவம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் மாமல்லபுரம்-முகையூர் இடையேயான 36 கிலோ மீட்டர் சாலை பணிகளபணிகளை அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்கவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் பூண்டியாங்குப்பம் நாகப்பட்டினம் பிரிவில் சுமார் 113 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் வேகம் எடுத்துள்ளது.

மேலும் மரக்காணம்- புதுச்சேரி சாலையை மேம்படுத்த ஏலம் கோரி உள்ளதுடன், நாகப்பட்டினம்-ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையான சாலை விரிவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. தொடர்ந்து அனைத்து பணிகளையும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஈசிஆர் மட்டுமில்லை.. பல்லாவரம்-ஜிஎஸ்டி கூட வருது:

ஈசிஆர் சாலை மட்டுமல்லாமல் பல்லாவரம்-ஜிஎஸ்டி சாலையை விரிவு படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்து இதற்காக 15.7 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்துவதன் மூலம் கிண்டியில் இருந்து தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்புறம் என்ன இனி சென்னைவாசிகள் கிண்டி, தாம்பரம் ஈசிஆர் ரூட்டுகளில் பறந்து செல்லலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments