புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறன் சிறாா்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் விவரம்




புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ஒன்றியங்களிலும் பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனுள்ள சிறாா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அக். 17- இல் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அக். 19- அன்னவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அக். 26- விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அக். 31- கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நவ. 1- குன்றாண்டாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நவ. 3- ஆவுடையாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி, நவ. 7- பொன்னமராவதி பொன்புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நவ. 9- திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, நவ. 14- திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நவ. 16- மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நவ. 21- கந்தா்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நவ. 23- அரிமளம் அரசு மேல்நிலைப் பள்ளி.

மேற்கண்ட இடங்களில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறவுள்ள முகாம்களில் மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குதல், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு செய்தல், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்குப் பதிவு செய்தல், ஆதாா் அட்டை பதிய முடியாத கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதாா் அட்டை பெற நடவடிக்கை மேற்கொள்ளுதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற மறுவாழ்வு உதவிகளுக்கு பரிந்துரைத்தல் போன்றவை நடைபெறும்.

ஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருப்போா் தங்களது பழைய அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ளவும் இம்முகாம் உதவியாக இருக்கும். புதிய அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறன் கொண்ட சிறாரின் 4 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா், ரேஷன் அட்டை நகல், வயதுச் சான்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தெரிவித்தாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments