பட்டா மாறுதலுக்கு...
தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறை www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அதில், பட்டாமாறுதல் ‘தமிழ்நிலம்' செயலி இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை Tamil Nilam Citizen portal https://tamilnilam.tn.gov.in/citizen/ இணைக்கப்பட்டுள்ளது.
உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரிவரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம் (ஊரகம்), தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக கொலாப்லேண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டு இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இணையவழி சேவை
பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நிலவிவரம், புலப்படம், நகர நிலஅளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டாமாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும், எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவை (www.eservices.tn.gov.in) இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப்பட்டியல்கள் விவரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவை அறியலாம்.
எனவே பொதுமக்கள் மேல்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் தமிழ் நிலம் செயலி மூலம் நிலஅளவைத்தொடர்பான விவரங்களை பார்வையிட்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.