பேச்சுப்போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு




பேச்சுப்போட்டியில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேச்சுப்போட்டி

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் காந்தியடிகள், நேரு பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் நடைபெறும் பேச்சுப்போட்டியில் பங்குப்பெற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பெற உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை மட்டும் தேர்வு செய்து சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் (ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலிருந்தும் ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம்) இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டி நடைபெறும் நாள், இடம், நேரம் விதிமுறைகள் ஆகியவை பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர், கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் வாயிலாகவும் தெரிவிக்கப்பெறும்.


பயன்பெறலாம்

போட்டியில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் உரிய படிவத்தில் பரிந்துரைக்கடிதம் பெற்று தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் (pdkttamilthai@gmail.com) அனுப்பிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 04322-228840) தொடர்பு கொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments