கந்தர்வகோட்டை அருகே பஸ் இயக்கக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
கந்தர்வகோட்டை அருகே பஸ் இயக்கக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பஸ் இயக்கக்கோரி...

கந்தர்வகோட்டை அருகே தெத்துவாசல் பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தெத்துவாசல் பட்டி, புனல்குளம், மஞ்சபேட்டை ஆகிய கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்கள், பொதுமக்கள் தினசரி தஞ்சாவூருக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்லும் 74 எண் கொண்ட நகர பஸ் கடந்த சில நாட்களாகவே வரவில்லை. சில நேரங்களில் பஸ் வந்தாலும் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்று விடுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் தஞ்சாவூர்-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரின் ேபரி கார்டை சாலையில் இழுத்து வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ேபாலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments