பட்டுக்கோட்டையில் இரயில் சேவை தொடங்கி 121 ஆண்டுகள் நிறைவுற்று 122 ஆம் ஆண்டு தொடங்குகிறது....
பட்டுக்கோட்டையில் இரயில் சேவை தொடங்கி 121 ஆண்டுகள் நிறைவுற்று 122 ஆம் ஆண்டு தொடங்குகிறது....

பட்டுக்கோட்டை ரயில் நிலையம் வரலாறு 

தென்னிந்திய ரயில்வே கம்பெனி 1890 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டை வரை மீட்டர்கேஜ் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டது .

02.04.1894 ந்தேதி மயிலாடுதுறை முத்துப்பேட்டை மீட்டர்கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு இரயில் சேவை தொடங்கப்பட்டது பிறகு 20 .10 .1902 ஆம் தேதி முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை வரை மீட்டர் கேஜ் இரயில் அமைக்கப்பட்டு இரயில் சேவை தொடங்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து  31. 12 .1903 ஆம் தேதி பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வரை இரயில் பாதை அமைக்கப்பட்டு இரயில் சேவை தொடங்கப்பட்டது .

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமது மண்ணின் மைந்தர் சுதந்திர இந்தியாவின் முதல் இரயில்வே இணை அமைச்சர்  அமரர் .கும்மட்டிதிடல் 
க. சந்தானம் அவர்களின் முயற்சியால் 
 29. 03 .1952 ஆம் தேதி அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி வரை இரயில் பாதை அமைக்கப்பட்டு இரயில் சேவை தொடங்கப்பட்டது .

இவ்வாறக  மயிலாடுதுறை  திருவாரூர் முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி இரயில் பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டு  அதில் இரயில்கள் இயங்கி வருகிறது .

2018/2019 ல் திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி மீட்டர் கேஜ் பாதை அகல இரயில் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டது.

மன்னார்குடி - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை புதிய அகல இரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

வருங்காலத்தில் பட்டுக்கோட்டை இரயில் நிலையம் சிறப்பு மிக்க சந்திப்பாக மலரும் .

திருவாரூர் - காரைக்குடி பாதையின் வரலாறு 

மயிலாடுதுறை திருவாரூர் திருத்துறைபூண்டி அதிராம்பட்டினம் முத்துப்பேட்டைவரை 02.04.1894 ம்நாள்  மீட்டர் கேஜ் இரயில் பாதை பயணிகள் உபயோகத்திற்காக துவங்கப்பட்டது. முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை வரை 20.10.1902 ந்தேதியும் பட்டுக்கோட்டை பேராவூரணி  அறந்தாங்கி வரை 31.12.1903 ந்தேதி மீட்டர் கேஜ் இரயில் பாதை திறந்து வைக்கப்பட்டது. 

சுதந்திரம் பெற்ற பின்னர்   முன்னாள் இரயில்வே இணை அமைச்சர் அமரர் கும்மட்டி திடல் க.சந்தானம் (1952) அவர்களுடைய முயற்சியால்  காரைக்குடி வரை இந்தப்பாதை விரிவு படுத்த பட்டது.

இந்த இரயில் தடத்தில்  சென்னை -இராமேஸ்வரம் போட்மெயில் விரைவு ர‌யி‌லில் இருந்து  இரண்டு இரயில் பெட்டிகள் மயிலாடுதுறையில் பிரிக்கப்பட்டு, மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரை இயங்கிய பாஸ்ட் பாசஞ்சர் இரயிலில் இணைக்கப்பட்டு இருமுனைகளில் இருந்தும் இயங்கி வந்தது. 

பின்னர்  அப்போதைய புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வி.என்.சுவாமிநாதன் அவர்கள் முயற்சியால் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு மனோரா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் விரைவு இரயில் இயக்கப்பட்டது. 

பின்னர் மனோரா எக்ஸ்பிரஸ் கம்பன் எக்ஸ்பிரஸ் ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வந்தது. 

இந்த இரயில் பின்னர் மானாமதுரை வரை நீட்டிக்கப்பட்டது. 

இத்தடத்தில் மயிலாடுதுறையில் இருந்தும் திருவாரூரில் இருந்தும் காரைக்குடிக்கும், மயிலாடுதுறையில் இருந்து பேராவூரணி மற்றும் திருத்துறைப்பூண்டி நகரங்களுக்கும் பயணிகள் இரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த இரயில்கள்  மூலமாக சிவகங்கை, இராமநாதபுரம், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் (தற்போது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னை மற்றும் நாட்டின் இதர பகுதிகளுக்கு பயணம் செய்து வந்தனர்.

விவசாயிகள், மீனவர்கள் ,அரசு அலுவலர்கள் , மாணவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், நோயாளர்கள், வெளிநாடு செல்வோர், ஆன்மீக யாத்திரை செல்பவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த இரயில் பாதை பெரிதும் பயன்பட்டு வந்தது.

பயணிகள் இரயில்கள் மூலமாகவும் சரக்கு இரயில்கள் மூலமாகவும் இப்பகுதியில் விளையும் நெல், தேங்காய், மாங்காய், தான்யங்கள் கொப்பரை தேங்காய்,அரிசி, மீன் கருவாடு ,கடல் உப்பு கட்டிட கட்டுமான பொருட்கள் விவசாயத்திற்கான உரங்கள் பூச்சி மருந்துகள் ஜவுளி பொருட்கள் பத்திரிக்கைகள் ஆகியனவும் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

 நாடு முழுவதும் மீட்டர் கேஜ் பாதைகளை அகல இரயில் பாதையாக மாற்றும் பணியின் காரணமாக இத்தடத்தில் 2006 ஆம் ஆண்டு  சென்னைக்கான விரைவு இரயில் சேவை நிறுத்தப்பட்டது.

காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரையிலான மீட்டர் கேஜ் பயணிகள் இரயில் சேவை 14.03.2012 தேதியும்  திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரையிலான மீட்டர் கேஜ் பயணிகள் இரயில் சேவை 15.10 2012 தேதியிலும் நிறுத்தப்பட்டன.

முதற்கட்டமாக காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை( 74 கிலோமீட்டர்)  அகல இரயில் பாதை அமைக்கப்பட்டு 31.03.2018 ம்தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இரண்டாம் கட்டமாக பட்டுக்கோட்டை யில் இருந்து திருவாரூர் வரை (75கிலோமீட்டர்) அகல இரயில் பாதை அமைக்கப்பட்டு 30.03.2019 தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

மேற்கண்ட  அகல இரயில் பாதை அமைக்க சுமார் 750 கோடி ரூபாய் இரயில்வே துறையால்  செலவு செய்யப்பட்டுள்ளது.

இத்தடத்தில் மீட்டர் கேஜ் சமயத்தில் இயங்கிய சென்னைக்கான விரைவு இரயில் சேவை மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரை இயங்கிய அனைத்து பயணிகள் இரயில்களை இயக்கிட திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் பாராளுமன்ற மக்களவை  உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி தலைவர்கள்,  திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி  இரயில் உபயோகிப்போர் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் ,சமூக அமைப்புகள், வெளிநாட்டில் வாழும் இப்பகுதி மக்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோர் இணைந்து தொடர்ந்து  இரயில்வே அமைச்சர் ,இரயில்வே போர்டு தலைவர் இரயில்வே துறை அதிகாரிகள் அனைவருக்கும் கோரிக்கை வைத்துக்கொண்டு வருகின்றனர்.

கோரிக்கை 

மீட்டர் கேஜ் நேரத்தில் இத்தடத்தில் இயங்கி வந்த சென்னை காரைக்குடி இரவு நேர விரைவு இரயிலை(கம்பன் எக்ஸ்பிரஸ்) இருமுனைகளிலிருந்தும் இயக்க வேண்டும்.  

ராமேஸ்வரம் - தாம்பரம் புதிய தினசரி பகல் நேர விரைவு ரயில் சேவைகளை துவக்கிட வேண்டும் 

திருவாரூரிலிருந்து காரைக்குடி மற்றும் மதுரைக்கு பயணிகள் இரயில்களை இயக்க வேண்டும்.

தாம்பரம்- செங்கோட்டை அதிவிரைவு இரயில் மற்றும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு இரயில்களை தினசரி ரயில் சேவைகளாக இத்தடத்தில் இயக்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி போன்ற இரயில் நிலையங்களில் சரக்கு போக்குவரத்து பிரிவினை ஏற்படுத்தி
இத்தடத்தில் சரக்கு போக்குவரத்து இரயில்களையும்  இயக்கிட வேண்டும்.

அதிராம்பட்டினம் பேராவூரணி முத்துப்பேட்டை ரயில் நிலையங்களில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்.. 

செகந்திராபாத் - இராமேஸ்வரம் வாரந்திர சிறப்பு ரயில நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும்

வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் திருவாரூர்- காரைக்குடி ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் 

உள்ளிட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments