மணமேல்குடியில் ஏரியை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்படுகிறதா? புதுக்கோட்டை கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு




மணமேல்குடியில் ஏரியை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்படுகிறதா? என்பது குறித்து புதுக்கோட்டை கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஏரியை ஆக்கிரமித்து சாலை

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் உள்ள குருந்தன்குடி பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகின்றன. இதனால் ஏரியின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதற்கிடையே, ஏரியின் நடுவே ஆக்கிரமிப்பாளர்கள் சாலை அமைத்து வருகின்றனர். இதனால் இந்த ஏரியை நம்பியுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள. இந்த மனு நீதிபதி சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் சாலை அமைக்கும் பணி ஆகியன குறித்து உரிய விளக்கம் பெற்று பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் பதில் அளிக்க உத்தரவு

அதனை தொடர்ந்து, வருவாய் ஆவணங்களின் படி குருந்தன்குடி பெரிய ஏரியின் மொத்த பரப்புளவு எவ்வளவு? தற்போது ஏரியின் மொத்த பரப்பு எவ்வளவு, அங்கு எந்த வகையிலான ஆக்கிரமிப்பு உள்ளது, வருவாய் ஆவணங்களின் படி, ஏரியின் நடுவே சாலை அமைக்கப்படுகிறதா, ஆக்கிரமிப்புகள் எப்போது அகற்றப்படும் என்பது உள்ளிட்ட விவரங்களை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் மணல்மேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments