ஆவுடையார்கோவில் கடைவீதியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆவுடையார்கோவில் கடைவீதியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச்செயலாளர் சொர்ணகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மகாசாமி நகர், சுந்தனாவூர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், அரசு அலுவலகங்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் நலன்கருதி ஒக்கூரில் செல்போன் உயர்கோபுரம் தடையின்றி இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments