புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்யுமா? இந்த வார வானிலை நிலவரம் இது தான்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவி வந்தது. தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில்கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும். ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அத்துடன் இந்த வாரத்தில் வெப்பநிலை அளவு குறைந்து 24 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை நிலவும்.

அதாவது கடந்த வாரத்தை விட இந்த வாரம் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும் என்றும் அத்துடன் இந்த வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 50 சதவீதம் முதல் 55 சதவீதம் மழைக்கும் மீதி நாட்களில் லேசான தூரல் மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் அக்.29, 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.

அக்.29- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

அக்.30- தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தேனி,  மதுரை, நீலகிரி, கோவை ஆகிய  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments