பரமக்குடி-ராமநாதபுரம் நான்குவழிச்சாலை திட்டம்: நான்காண்டுகளாகியும் முடியாத நிலம் எடுக்கும் பணி




ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிருந்தும் யாத்திரீகர்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மதுரை முதல் ராமேஸ்வரம் வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது.

தற்போது மதுரையில் இருந்து நான்கு வழிச்சாலையாக 76 கி.மீ.,க்கு பரமக்குடி வரை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பரமக்குடி --ராமநாதபுரம் 36 கி.மீ., இருவழிச் சாலையாக உள்ளது. கடந்த 2018 ல் பரமக்குடி--ராமநாதபுரம், ராமநாதபுரம்--ராமேஸ்வரம் வரை 99 கி.மீ., நான்கு வழிச்சாலையாக மாற்றத் திட்டமிடப்பட்டது.

இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடக்கிறது. இதனால் பரமக்குடி-ராமநாதபுரம் ரோட்டில் குறுகிய வளைவுகள், பாலங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. நாளுக்கு நாள் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

எனவே நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடித்து 2024ம் ஆண்டிலாவது பரமக்குடி-ராமநாதபுரம் வரையிலாவது முதலில் நான்கு வழிச்சாலை அமைக்க அரசு முன்வர வேண்டும்,என மக்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ராமநாதபுரம்- -பரமக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் நிலங்களை கையகப்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது.

வரும் ஆண்டில் பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் துவங்க உள்ளது, என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments