ரூ.320½ கோடியில், 23 கி.மீ. நீளத்துக்கு 43 ஆண்டுகளுக்கு பிறகு பேரளம்-காரைக்கால் ரெயில்பாதை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது: 78 பாலங்கள், 21 சுரங்கப்பாதைகளுடன் 6 ரெயில் நிலையங்களை இணைக்கிறது






காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாக முதன்மை மக்கள் தொடா்பு அலுவலா் பி. குணசேகரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் - பேரளம் புதிய அகல பாதை திட்டம் (23.55 கி.மீ.) ஒரு முக்கியமான திட்டமாகும். தெற்கு ரயில்வேயின் கட்டுமானப் பிரிவால் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சுமாா் 30 ஆண்டுகளுக்குப் பின் இந்த பாதையில் புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இப்பாதையில் மின் மயமாக்கலுடன் திட்டப் பணி ரூ. 320.64 கோடியில் நடைபெறுகிறது.

இதில் 1 பெரிய மேம்பாலம், 77 சிறு பாலங்கள், 21 சுரங்கப் பாதை மற்றும் ரயில்வே கேட் அமைப்புடன் பணிகள் நடைபெறுகின்றன.

இதில் திருநள்ளாறு நிலையம் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அம்பகரத்தூரில் நிலைய கட்டுமானத்துக்கான அடித்தளம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பேரளம் - திருநள்ளாறு இடையே 20 சதவீத மணல் நிரப்பும் பணி முடிந்துள்ளது. திருநள்ளாறு - காரைக்கால் இடையே 75 சதவீத மணல் நிரப்பும் பணிகள் முடிந்துள்ளன.

இந்த திட்டம் காரைக்கால் துறைமுகத்துடன் இணைப்பு மற்றும் சரக்கு ரயில்கள் இயக்க நேரத்தை வெகுவாக குறைக்கும். பல்வேறு பகுதிகளில் இருந்து திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வருவோருக்கு வசதியை ஏற்படுத்தும்.

புதிய பாதை காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு எளிதில் செல்ல வசதியை ஏற்படுத்தும்.

ஒட்டுமொத்தத்தில் காரைக்கால் - பேரளம் ரயில் பாதைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments