சம்பா பயிருக்கு 15-ந்தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்யலாம்
ஆவுடையார்கோவில் தாலுகாவில் நடப்பாண்டு சம்பா பருவத்தில் பயிர் செய்துள்ள விவசாயிகள் வெள்ளம், வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதலில் இருந்து மகசூல் இழப்பு பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவும், வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு பிரீமிய தொகையான ரூ.513 செலுத்தி காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு இம்மாதம் 15-ந் தேதி கடைசி நாள் ஆகும். காப்பீடு செய்வதற்கு தேவையான முன்மொழிவு படிவம், நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமிய தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சவீதா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments