கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் இரவில் பெய்த பலத்த மழை
கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் இரவில் பலத்த மழை பெய்தது 

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.  

இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதே போல இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் 03.11.2023  இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்தது கருமேகங்கள் சூழ்ந்து வெப்பம் தணிந்து  மிதமான மழை பெய்து வருகிறது குளிர்ச்சியான சூழல்நிலவியது. 

இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கியது.

தற்போது பெய்த  மழையினால்  விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 கோபால்ப்பட்டிணத்தில் காட்டுத்குளம் நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் இரண்டு குளங்களிலும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது.. மழை பெய்து குளங்கள் எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments