கோபாலப்பட்டிணம் அரசு தொடக்கப்பள்ளியில் நவ.04,05-ல் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்க்க மற்றும் திருத்த முகாம்.!




கோபாலப்பட்டிணத்தில்  (04-11-2023) சனிக்கிழமை (05-11-2023) ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்க்க மற்றும் திருத்த முகாம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் அரசு தொடக்கப்பள்ளியில்  04/11/2023 சனிக்கிழமை மற்றும் 05/11/2023 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்க்க மற்றும் திருத்த முகாம் நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல். திருத்தம் செய்தல் மற்றும் நீக்கம் செய்வதற்காக  நவ 04 (சனிக்கிழமை) மற்றும்  நவ 05 (ஞாயிற்றுக்கிழமை) தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகின்றது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யலாம் என்றும், நவம்பர் மாதம் 04.11.20223 05.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 (சனி,ஞாயிறு) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2024 ஜனவரி 1-ல் 18-வயது பூர்த்தியாவோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்:

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- 2

முகவரி சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.பாஸ்போர்ட்
2.கேஸ் பில்
3.தண்ணீர் வரி ரசீது
4.ரேஷன் அட்டை
5.வங்கி கணக்கு புத்தகம்
6.ஆதார் கார்டு

வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.10-ம் வகுப்பு சான்றிதழ்
2.பிறப்பு சான்றிதழ்
3.பான் கார்டு
4.ஆதார் கார்டு
5.ஓட்டுனர் உரிமம்
6.பாஸ்போர்ட்
7.கிசான் கார்டு

அடையாள சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.பான் கார்டு
2.ஓட்டுனர் உரிமம்
3.ரேஷன் கார்டு
4.பாஸ்போர்ட்
5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்
6.10-ம் வகுப்பு சான்றிதழ்
7.மாணவர் அடையாள அட்டை
8.ஆதார் கார்டு



வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம், விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதோர், வாக்காளர் பட்டியல் பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்ய, முகாம் நாளில் விண்ணப்பிக்கலாம்.

எந்தெந்த படிவம் எதற்கு?

வாக்காளர் பட்டியில் புதிதாக பெயர்சேர்க்க, படிவம் 6; பெயர் நீக்கம் செய்ய படிவம் 7; பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம் 8; ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், புதிய குடியிருப்பு முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம் 8ஏ பூர்த்தி செய்து வழங்கவேண்டும். www.nvsp.in என்கிற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்கிற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வரும் ஜனவரி மாதம் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். சிறப்பு முகாம் நாளில், பொதுமக்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி பதிவு அலுவலர்களை தொடர்புகொண்டு, தங்கள் கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கப்பட்டது. 

இந்த பணி வருகிற டிசம்பர் 9ம் தேதி வரை நடக்க உள்ள நிலையில், வரும் 2024-ம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் முதல் தேதியில் 18 வயது பூர்த்தியாக உள்ளவர்களும், இதற்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் பெயர் நீக்கமும் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை  (ஞாயிற்றுக்கிழமை) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, திருத்தங்களை மேற்கொள்ள voter helpline app nvsp.in மற்றும் voters.eci.gov.in ஆகிய இணைய சேவைகளின் மூலம் தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இதேபோல், வருகிற 18 மற்றும் 19ம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்கும் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் பணிகள் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெறும். 

இதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments