புதுக்கோட்டை மாவட்டத்தில் காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க 15-ந் தேதி கடைசி நாள்




புதுக்கோட்டை மாவட்டத்தில் இஸ்லாமிய மக்களின் பிரதிநிதியாக மாவட்ட காஜி நியமனத்திற்காக மாவட்ட கலெக்டர் தலைவராகவும், 5 உலமாக்கள், 2 இஸ்லாமிய முக்கியஸ்தர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட மாவட்ட அளவிலான காஜி தேர்வு குழு அமைக்கப்பட உள்ளது. காஜியாக நியமிக்க இருப்பவர் இஸ்லாமிய சட்டவியலில் நிபுணத்துவமிக்க ஆலிம், அங்கீகரிக்கப்பட்ட அரபு கல்லூரி அல்லது நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிந்த நபர்களில் 3 நபர்களுக்கு குறையாமல் தேர்ந்தோர் பெயர் பட்டியலை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய பிரமுகர்களில் நியமிக்கப்பட்ட குழுவினரை கலந்தாலோசித்த பின்னர், காஜி நியமனம் செய்வதற்காக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து காஜி சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த நபரை காஜியாக நியமனம் செய்ய அரசாணையிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்வு குழுவால் நியமனம் செய்யப்பட்ட அமானுல்லாஹ் உடல் நலக்குறைவால் மரணமடைந்ததால் காலி இடத்தை நிரப்ப புதிய காஜி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. புகைப்படத்துடன் கூடிய சுயவிவர குறிப்புகள், கல்வி சான்றிதழ்கள் ஆகிய விவரங்களுடன் வருகிற 15-ந் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments