அறந்தாங்கியில் பசித்தோருக்கு உணவு நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நிவாரண குழு சார்பில் பசித்தோர் உணவு நிலையம் அமைக்கப்பட்டது.

அறந்தாங்கி பெரிய பள்ளிவாசல் எதிரில் பசித்தோர் உணவு எடுத்துக்கொள்ளும் வகையில் பொதுவாக அமைக்கப்பட்டுள்ள நிலையத்தை அறந்தாங்கி நிவாரண குழு ஒருங்கிணைப்பாளர் அப்துல்லாஹ் தலைமையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பா.வரதராஜன் துவங்கிவைத்தார். 

மாவட்ட பொதுச்செயலாளர் மலையப்பன் இணை பொதுச்செயலாளர் முனைவர் முபாரக் அலி, பொருளாளர் கிரீன் முகம்மது, நகர தலைவர் புவனா செந்தில், நகர துணை செயலாளர் ரபீக், மட்டன்ஸ்டால் மீரா மைதீன் ஆகியோர் கலந்துகொண்டு ஏழைகளுக்கு உணவுகள் வழங்கினார்கள். ஆதார் அபு அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த உணவு நிலையத்தில் தினமும் 50 ஏழைகள் பயன்பெறுவர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments