புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகள் ரூ.1 கோடியில் பசுமையாக மாறுகிறது. முதற்கட்ட ஆய்வு நிறைவு பெற்றுள்ளது.
பசுமை பள்ளிகள்
தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுக்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், பசுமை தமிழகமாகவும் மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் மரக்கன்றுகள் நடுதல், வனப்பரப்பை அதிகரித்தல், மீண்டும் மஞ்சப்பை திட்டம் உள்ளிட்டவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 25 பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றப்படுகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- பசுமை பள்ளி திட்டம் என்பது பள்ளிகளில் மாணவர்கள் மூலமாக மழைநீர் சேகரிப்பு, மக்கும் உரம் தயாரிப்பு, காய்கறி தோட்டம் உருவாக்குவது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், நீர் பயன்பாட்டை குறைப்பது, கழிவுநீரை மறுசுழற்சி செய்தல், சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த திட்டம் ஆகும்.
5 அரசு பள்ளிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி, கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவரங்குளம், வெண்ணவால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் மதிப்பில் பசுமை பள்ளி திட்டம் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஒரு பள்ளிக்கு தேவையானதை அந்த பள்ளியிலேயே உருவாக்கி பயன்படுத்துவது தான். சூரிய ஒளி மின்சாரம் மூலம் பள்ளிக்கு பயன்படுத்துவதை போக மீதி உள்ளதை வெளியில் பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதித்தல். காய்கறி தோட்டத்தில் பள்ளிக்கு சத்துணவு திட்டத்திற்கு தேவையான காய்கறிகளை விளைவித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
இட வசதி
தேர்வு செய்யப்பட்ட 5 அரசு பள்ளிகளிலும் இடத்தை பார்வையிட்டு, பள்ளியில் போதுமான இட வசதி உள்ளதா? என முடிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு சென்னையில் நடைபெறும். அதன்பின் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.