புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்தபடி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் கைது




புதுக்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் பட்டாசு வெடித்த படி சென்ற வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் சாகசம்

தீபாவளி பண்டிகை கடந்த 12-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் பட்டாசு வைத்து வெடித்து சாகசம் செய்த சம்பவமும் ஆங்காங்கே நடந்தது. இதில் புதுக்கோட்டையில் சாகசத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முகமது இர்பான் (வயது 19). இவர் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர் தீபாவளி பண்டிகையன்று மோட்டார் சைக்கிளில் வாணவெடியை வைத்து வெடித்து சாகசத்தில் ஈடுபட்டார். இதனை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோவை முகமது இர்பான் தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தல தீபாவளி பாடல்

வீடியோவின் பின்னணியில் நடிகர் அஜித்குமார் நடித்த அட்டகாசம் திரைப்படத்தில் வரும் தல தீபாவளி... தல தீபாவளி... எனும் பாடல் ஒலித்தது. இந்த வீடியோ தொடர்பாக போலீசார் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து போலீசார் விசாரித்ததில், அவர் அந்த வீடியோவை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே துணை கோள் நகரத்தில் சாலையில் வைத்து எடுத்தது தெரியவந்தது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மோட்டார் வாகன விதியை மீறியதாகவும் உள்ளிட்ட பிரிவுகளில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முகமது இர்பானை நேற்று கைது செய்தனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments