கஜா புயல் 2018: கோபாலப்பட்டிணத்தில் பழமையான ஆலமரம் வீழ்ந்த நாள்
2018 ம் ஆண்டு நவம்பர் 15 ந் தேதி இரவு கஜா புயல் கரையை கடக்கிறது என்று வானிலை அறிவிப்புகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை அடுத்தடுத்து மாற்றிக் கொண்டே இருந்தனர். ஆனால் இரவு 10 மணிக்கு பிறகு புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடங்கி 11 மணிக்கு பிறகு லேசான காற்றும் வீசத் தொடங்கியது. 12 மணிக்கு பிறகு வீசிய காற்றில் கடல் காற்றின் வாசனையை உணர்ந்தார்கள் உள்மாவட்டத்தில் உள்ள மக்கள். வீடுகளுக்குள் தஞ்சமடைந்திருந்தனர். வழக்கம் போல புயல் அறிவிப்பு வரும், பிறகு வலுவிழந்து போகும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது.

1 மணிக்கு பிறகு காற்றின் வேகம் அதிகரிகத் தொடங்கியதும் தான் மக்களுக்கு சிறிய பதற்றம் ஏற்பட்டது. அடுத்தடுத்து காற்றின் வேகம் அதிகரித்து தென்னை மரங்கள் மண்ணைத் தொட்டுவிட்டு மீண்டும் எழுந்தது. நீண்ட நேரம் சாய்ந்தும் உயர்ந்துமாக எழுந்த தென்னை மரங்கள் வேரோடு சாயத் தொடங்கியது. அடுத்தடுத்து மா, பலா, வாழை, தேக்கு, சந்தனம், வேம்பு, புளி, ஆலமரம், அரசமரம் என்று அத்தனை மரங்களும் வேரோடு சாய்ந்தது. பல வீடுகளில் மரங்கள் விழுந்தது. பல உயர்கள் பறிபோனது. ஆடுகள் தண்ணீர் அடித்துச் சென்றது. விடியும்போது கஜாவின் கோரதாண்டவத்தால் உருக்குலைந்து காணப்பட்டது புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்.

கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி அதிகாலை கஜா புயல் கரையை கடந்த போது புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தென்னை, மா, பலா, தேக்கு, சந்தனம், வேம்பு உள்பட லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை தோட்டங்கள் அழிந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டன. ஏராளமான குடிசைகள், வீடுகளை புயல் கபளீகரம் செய்தது. விளைவு, பல நாட்களாக  குடிதண்ணீர், சாப்பாடு கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். வாரக்கணக்கில் போக்குவரத்து முடங்கியது. பல மாதங்களை கடந்த பிறகு நிலைமை சீரடைந்தாலும் கஜா புயல் ஏற்படுத்திய வடுக்கள் இன்றளவும் மாறாமல் உள்ளதாக இருக்கின்றன என்று விவசாயிகளும், பொதுமக்களும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கஜா புயல் 2018 : கோபாலப்பட்டினத்தில் பழமையான ஆலமரம் வீழ்ந்தது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தில் கஜா புயலின் கொடூர தாண்டவத்தால் பல தலைமுறை கண்ட கடற்கரை பள்ளிவாசல் அருகில் இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. மேலும் பல இடங்களில் மரங்கள் மற்றும் ஓட்டு கட்டடங்கள் சேதமடைந்துள்ளது.

புயல் கரையை கடக்கும் பொழுது கோபாலப்பட்டினத்தில் அதிவேகத்தில் காற்று வீசியுள்ளது.

மேலும் இந்த கஜா புயலினால் மழை பெய்தது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments