கட்டுமாவடி - மீமிசல் இடையே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இலவச புதிய நகர பேருந்து இயக்க கோரி போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA கடிதம்
கட்டுமாவடி - மீமிசல் இடையே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில்  இலவச புதிய நகர பேருந்து இயக்க கோரி போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA கடிதம் எழுதியுள்ளார்

இது குறித்து  அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் S.T ராமச்சந்திரன் MLA அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

எனது அறந்தாங்கி தொகுதி மணமேல்குடி தாலுக்காவில் உள்ள கட்டுமாவடி முதல் மீமிசல் வரை (கிழக்கு கடற்கரை சாலையில்) மீன்பிடி இறங்கு தளங்கள் இரண்டும் நாட்டு படகு மீன்பிடி தளம் சுமார் 15 இடங்களில் உள்ளது எனவே பெண்கள் கட்டுமாவடி மீன் பிடி ஏலம் மையத்திற்கு சென்று வர வேண்டியுள்ளது. ஆனால் கட்டுமாவடி முதல் மீமிசல் வரை நகரப் பேருந்து வசதி இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய நகரப் பேருந்து இயக்க ஆவண புரிய வேண்டுமென்றும், இப் பகுதி மகளிர் நலன் கருதி அவர்களின் பணிக்கு செல்லும் மகளிர்காக இலவச பேருந்து வசதியையும் ஏற்படுத்தித்தர வேண்டுமென்றும் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments