கோட்டைப்பட்டினத்தில் KPM & JPM ஜமாத்தார்கள் சார்பாக இஸ்ரேல் அரசை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம்




கோட்டைப்பட்டினத்தில் KPM & JPM   ஜமாத்தார்கள் சார்பாக இஸ்ரேல் அரசை கண்டித்து  கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

21.11.2023, செவ்வாய்கிழமை பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து இன அழிப்பு செய்யும் இஸ்ரேலிய பயங்கரவாத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள் சார்பாக கோட்டைப்பட்டினம் கடைவீதியில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர்
திரு.ப.அப்துல் சமது MLA அவர்களும்,

மணமேல்குடி திமுக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவருமான
திரு.எஸ்.எம். சீனியார் அவர்களும் கலந்துகொண்டு கண்டண உரையாற்றினார்கள். 

இதில் இரு ஊர் ஜமாத் தலைவர்கள் மற்றும் ஜமாத் பிரதிநிதிகள், தமுமுக மற்றும் மமக பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் மற்றும் இரு ஊர் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு  இஸ்ரேலிய பயங்கரவாத்தை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments