அரசு பள்ளிகளில் 3 சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கலெக்டர் மெர்சிரம்யா வழங்கினார்




புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 3 சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்களை கலெக்டர் மெர்சிரம்யா வழங்கினார்.

சத்துணவு மையங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 

* குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 

* அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 

* புதுக்கோட்டை நகராட்சி தர்மராஜ்பிள்ளை தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் 

சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதனை கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியை சேர்ந்தவர்களிடம் கலெக்டர் மெர்சிரம்யா நேற்று வழங்கினார். அதன்பின் அவர் தெரிவித்ததாவது:-

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கியுஸ்ட்டு என்ற நிறுவனத்தை சேர்ந்த முதன்மை தணிக்கை அலுவலரால் மேற்கண்ட 3 அரசு பள்ளிகளின் சத்துணவு மையங்களில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

தரச்சான்று

இப்பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள உணவு கூடங்களில் சுடுதண்ணீர் வசதி, உணவு வெப்பமானி, ஜன்னல்களில் பூச்சிகள் வராமல் தடுக்கும் வகையில் தடுப்பு வலைகள், உணவு பாதுகாப்பு அங்கீகாரம், தொற்றில்லா சான்றிதழ், காய்கறி தோட்டம் உள்ளிட்டவைகளை கடைப்பிடிக்கப்பட்டுள்ளதை கண்டறியப்பட்டு, அதனடிப்படையில் மேற்கண்ட 3 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றுகள் வழங்கப்பட்டது. மேலும் இதுபோன்று அதிகளவில் தரச்சான்று பெற்று பள்ளி சத்துணவு மையங்களாக இம்மாவட்டத்தை மாற்றிட தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சென்னை இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவன முதன்மை தணிக்கை அலுவலர் கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஜெயராமன், மாவட்ட சத்துணவு பிரிவு உதவியாளர் சிவராஜன், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பாண்டிசெல்வி போஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் பேபிராணி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முகமது இப்ராஹிம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவாநந்தம் (அரிமளம்), சண்முகாதேவி (குன்றாண்டார்கோவில்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments