கோபாலப்பட்டிணத்தில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் மையத்தாங்கரையில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றது .
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் மையத்தாங்கரை சுற்றுசுவர் அமைக்க வேண்டும் என்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்களிடம் ஜமாத் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கை நிறைவேற்றி தருவதாக சட்டமன்ற உறுப்பினர் வாக்குறுதி அளித்தார்.
அந்த அடிப்படையில் 02.08.2023 புதன்கிழமை அன்று மாலை 4 மணிக்கு 5 இலட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி மையத்தாங்கரை சுற்றுசுவர் அமைக்க ராமச்சந்திரன்MLA அவர்கள் மற்றும் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்கள்.
அதன் அடிப்படையில் அந்த வேலைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு 5 இலட்சம் மதிப்பீட்டில் 38 மீட்டர் நீளத்தில் வேலைகள் நடைபெற்று நிறைவு பெற்றது.
இதற்கு நிதி ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினர் ST. ராமச்சந்திரன் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.