முத்துக்குடா மீனவர் கிராமத்தில் உலக மீனவர் தின சிறப்பு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் முத்துக்குடா மீனவர் கிராமத்தில் உலக மீனவர் தின சிறப்பு கூட்டம் மாவட்ட துணை தலைவர் முத்துக்குடா ரகுவரன் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. இதில் மீனவர்கள்  சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் மீனவர் சுட்டமைப்பு மாநில  செயல் தலைவர் தோழர் M.கருணாமூர்த்தி பேசினார்.  மீனவர்களின் கோரிக்கைகளை விளக்கி சிஐடியூ மாவட்ட துணை தலைவர் சி.அன்புமணவாளன் அவர்களும் மீனவர் அமைப்பின் துவக்கம் முதல் இன்றுவரை சிஐடியூ ஆற்றிய பணிகள் மற்றும்  கோரிக்கைகளை வென்றெடுக்கும் விதம் குறித்து சிஐடியூ மாவட்ட செயலாளர் A. ஸ்ரீதர் உரையாற்றினார் நிகழ்வில் மீன்பிடி சங்க மாவட்ட செயலாளர் கரு. ராமனாதன், மாவட்ட தலைவர் கோ.வெங்கடேஷ், துணைதலைவர் முகமதுகனி அனைத்து போக்குவரத்து சங்க பொது செயலாளர் கே.ரெத்தினவேல், கட்டுமான சங்கம் சார்பில் காளி தாஸ் , மற்றும் முத்துகுடா மீனவர்கள் 100 - க்கும் அதிகமானோர்  பங்கேற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments