கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் அருகில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் முக்கிய பகுதியான காட்டுக்குளம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் (பாலம்) மிகவும் மோசமான நிலையில் உள்ளது இந்த பாலம் பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் (பாலமாகும்)தற்போது அந்த பாலமானது விரிசல் விட்டு விழுகும் தருவாயில் உள்ளது.பள்ளிக்குழந்தைகள் , மக்கள் அதிகமாக நடந்து செல்லக்கூடிய சாலையாக இருப்பதால்  அதை உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

குறிப்பு: யாரும் அதன் பக்கத்திலோ,ஒரத்திலோ நடக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். கனரக வாகனங்கள் செல்லும் போது மெதுவாக செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

புகைப்பட உதவி : ரபீக் பொறியாளர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments