தீபாவளி பண்டிகை: சென்னை - திருநெல்வேலி இடையே 4 நாட்கள் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


தீபாவளி பண்டிகை: சென்னை - நெல்லை சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்

தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து நெல்லைக்கு  சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருநெல்வேலி - சென்னை - திருநெல்வேலி இடையே கூடுதலாக மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி நவம்பர் 10,11,13,14 ஆகிய தேதிகளில் அன்று சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.00மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் நவம்பர் 10,11,13,14 திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் (06068) மாலை 03.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்ட சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments