திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டும் பணிகள் 93 சதவீதம் நிறைவு ஜனவரியில் திறக்கப்படுகிறது




திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் புதிய முனையம் கட்டும் பணிகள் 93 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த புதிய முனையம் ஜனவரியில் திறக்கப்படுகிறது.

புதிய முனையம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு புதிய முனையம் கட்டுவதற்காக ரூ.1,100 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனிடையே கொரோனா பரவல் காரணமாக இப்பணிகள் முடங்கின. அதன்பின் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து மீண்டும் பணிகள் ெதாடங்கின. 134 ஏக்கரில் 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 4 நுழைவாயில், 12 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

4 வாயில்கள்

அதேபோல் பயணிகள் வெளியேற நான்கு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 60 செக்கிங் கவுண்ட்டர்கள் கட்டப்பட்டுள்ளன. உள்நாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய 3 எக்ஸ்ரே எந்திரங்கள், வெளிநாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனையிட 4 எக்ஸ்ரே எந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகளை விமானத்தில் இருந்து கொண்டு வரவும், விமானத்திற்கு கொண்டு செல்லவும் 6 கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் குடியேற்ற சோதனைக்கு 58 கவுண்ட்டர்கள் கட்டப்பட்டுள்ளது. பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி நேரடியாக விமான நிலையத்திற்குள் வருவதற்கு 10 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

93 சதவீதம் நிறைவு

விமான நிலையத்திற்குள் பஸ்களில் அழைத்து செல்வதற்காக இரண்டு வழித்தடங்கள் உள்ளன. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் உள்நாட்டு பயணிகள் 1,500 பேரையும், வெளிநாட்டு பயணிகள் 4 ஆயிரம் பேரையும் கையாள முடியும். 750 கார்கள் இருக்கும் வகையில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நவீன முறையில் விமானங்களை அதன் குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்துவதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்த பணிகள் 93 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பணிகள் முழுமை அடைந்துவிடும்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய முனையத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments