தொண்டியில் தினசரி மார்க்கெட் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்




தொண்டி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் அழகுராணி ராஜேந்திரன், செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொண்டி பேரூராட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் உடற்பயிற்சி ஆய்வுக்கூடம் அமைக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலெக்டரிடம் வலியுறுத்துவது. பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் பெயர் பலகை அமைத்தல், தொண்டி 10-வது வார்டில் பழுதடைந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டுதல், மேலத்தெரு சம்பு அருகில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவது, கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் தினசரி மார்க்கெட் அமைத்தல், வார்டு எண் 2-ல் கலையரங்கம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பேரூராட்சி கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதியில் நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டனர். இதில் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இளநிலை உதவியாளர் ரவி நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments