தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,312 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன




புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி நடைபெறுகிறது. விவசாயத்திற்கு தேவையான உரங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சம்பா சாகுபடிக்காக தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு நேற்று 1,312 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயிலில் வேகன்களில் இருந்து உர மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளா்கள் இறக்கி, லாரிகளில் ஏற்றினர்.

எச்சரிக்கை

இந்த உர மூட்டைகளில் யூரியா உரம் 483 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. உரம் 191 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 574 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் உரம் 64 மெட்ரிக் டன்னும் வரப்பெற்றது. இதனை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள உரக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. லாரிகளில் உர மூட்டைகள் அனுப்பும் பணியை புதுக்கோட்டை மாவட்ட தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குனர் மதியழகன் ஆய்வு மேற்கொண்டார்.

வேளாண்மை அலுவலர் முகமது ரபி, ஸ்பிக் உர நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும், மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் உர நகர்வு குறித்து சிறப்பு பறக்கும்படை மூலம் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதனால், உர விற்பனையாளர்கள் விதி மீறல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments