திருச்சி எம்.ஐ.இ.டி. என்ஜினீயரிங் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து




திருச்சி எம்.ஐ.இ.டி. என்ஜினீயரிங் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

எம்.ஐ.இ.டி. கல்லூரிகள்

திருச்சி எம்.ஐ.இ.டி. பாலிடெக்னிக் கல்லூரி கடந்த 1984-ம் ஆண்டு என்ஜினீயர் முகமது யூனுஸால் தொடங்கப்பட்டது. பாரம்பரியமான இந்த கல்லூரியின் நிர்வாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி என விரிவடைந்து காணப்படுகிறது. இந்த கல்லூரிகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதில் எம்.ஐ.இ.டி. என்ஜினீயரிங் கல்லூரி கடந்த 1998-ம் ஆண்டு 3 துறைகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது 9-க்கும் மேற்பட்ட துறைகளுடன் இயங்கி வருகிறது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தரமான கல்லூரிகளுக்கு வழங்கும் என்.பி.ஏ. என்ற தேசிய தரச்சான்றிதழை 3 துறைகளுக்கு வழங்கியுள்ளது. இதேபோல் என்.ஏ.ஏ.சி. ஏ பிளஸ் என்ற உயரிய சான்றிதழ் கிடைத்துள்ளது. கல்விச்சேவை மட்டுமின்றி சமுதாயத்தை சேர்ந்த மக்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவிகளையும் வழங்கி வருகிறது.

தன்னாட்சி அந்தஸ்து

இந்த நிலையில் திருச்சி எம்.ஐ.இ.டி. என்ஜினீயரிங் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பரிந்துரையின் பேரில் புதுடெல்லியில் உள்ள பல்கலைக்கழக மானிய குழு இதற்கான சான்றிதழை வழங்கியுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் படிக்க மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் அங்கீகாரம் பெறப்பட்ட என்ஜினீயரிங் கல்லூரி எம்.ஐ.இ.டி. கல்லூரியாகும். மேற்கண்ட தகவலை திருச்சி எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் பொறியாளர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments