வடகிழக்கு பருவ மழை: பயிர்கள் பாதிப்பை கண்காணிக்க வேளாண்மை அலுவலகத்தில் மையங்கள் செல்போனில் தகவல் தெரிவிக்கலாம்




வடகிழக்கு பருவ மழையில் பயிர்கள் பாதிப்பை கண்காணிக்க வேளாண்மை அலுவலகத்தில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே விவசாயிகள் செல்போனில் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவ மழை

வடகிழக்கு பருவ மழை தற்போது பரவலாக பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை மூலம் மழைக்காலத்தில் ஏற்படும் பயிர் பாதிப்புகள், வாய்க்கால்கள் சீரமைப்பு, பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் உள்ள இடையூறுகள், பூச்சிநோய் தாக்குதல்கள் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கும் வகையில் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றில் வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பருவமழை காலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்களில் அதிகளவு நீர் தேங்குவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் அழுகி விடாதிருக்க தக்க வடிகால் வசதி செய்ய வேண்டியது அவசியமாகும். மழையால் பயிர்களுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்படின் வட்டார அளவிலான வேளாண்மைத்துறை அலுவலர்களை விவசாயிகள் உதவி மையங்களின் செல்போன் எண்கள் மூலமாக வோ, நேரடியாகவோ தொடர்பு கொள்ள வேண்டும்.

செல்போன் எண்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் புதுக்கோட்டை-9842564693, கந்தர்வகோட்டை- 9787967472, திருவரங்குளம்- 9159983601, கறம்பக்குடி- 9342160903, அறந்தாங்கி-9597769127, ஆவுடையார்கோவில்- 9442325600, மணமேல்குடி- 9659870843, திருமயம்- 9787528914, அரிமளம்-9965668408, பொன்னமராவதி- 6379701311, அன்னவாசல்-9159983601, விராலிமலை- 8973653797, குன்றாண்டார்கோவில்-9080709899 ஆகிய செல்போன் எண்களிலும், புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் 04322-221 666 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவோ, நேரிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments