அறந்தாங்கியில் அங்கன்வாடி மையத்தில் குப்பை கொட்டும் அவலம் நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை
அறந்தாங்கி நகராட்சி எதிரே மணிவிளான் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் அங்கன்வாடி மைய வளாகத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளை சிலர் தீவைத்து எரித்துவிடுவதால் அங்கன்வாடியில் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் அங்குள்ள குழந்தைகளுக்கு இருமல், மயக்கம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில் நகராட்சி அங்கன்வாடி மையத்தில் சுற்றியும் புற்கள், செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. மேலும் இங்கு சிலர் குப்பைகளை கொட்டி எரித்துவிடுவதால் குழந்தைகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். தற்போது மழைக்காலம் என்பதால் பாம்பு மற்றும் விஷஜந்துகளின் நடமாட்டம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments