குறுக்கே வந்த மாடு முத்துப்பேட்டை அருகே கோபாலசமுத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் வேன் கவிழ்ந்து 8 பேர் படுகாயம் 7 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்




துக்க வீட்டிற்கு சென்றபோது வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 7 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

வேன் கவிழ்ந்து

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கீழவாடியகாடு கிராமத்தை சேர்ந்த காசிலிங்கம் (வயது 60). இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று இறந்தார். இவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மாவட்டம், மதுக்கூரை அடுத்த கோட்டைக்காடு கிராமத்தில் இருந்து உறவினர்கள் இரண்டு வேன்களில் தலா 15 பேர் வீதம் 30 பேர் சென்றுள்ளனர். அதில் ஒரு வேன் உப்பூர் கோபாலசமுத்திரம் இடைய கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே ஒரு மாடு வந்துள்ளது.

இதனைக்கண்ட வேன் டிரைவர் மணி என்ற பாலசுப்பிரமணியன் மாட்டின் மீது மோதாமல் இருக்க திடீரென்று பிரேக் போட்டுள்ளார். அப்போது வேன் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனைக்கண்ட டிரைவர் மணி என்கிற பாலசுப்பிரமணியன் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். விபத்தில் சிக்கியவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து வேனில் சிக்கியவர்களை மீட்டனர்.

8 பேர் படுகாயம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன் ஆகியோர் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த காடந்தகுடி மற்றும் கோட்டைக்காடு வடக்கு தெருவை சேர்ந்த ஸ்டாலின் மனைவி சுவேதா (24), சிவலிங்கம் மனைவி செந்தாமரை (56), சங்கர் மனைவி தெய்வானை (43), தட்சிணாமூர்த்தி மனைவி பட்டம்மாள் (60), அன்புமணி மனைவி ஆனந்தவல்லி (35), ராஜேந்திரன் மனைவி ராஜவள்ளி (50), ராஜா மனைவி விமலா (42), பாலசுப்பிரமணியன் மனைவி சுந்தராம்பாள் (45) ஆகிய 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் முருகன் (40) உள்பட 7 பேர் சிறு சிறு காயங்களுடன் முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவர் மணி என்கிற பாலசுப்பிரமணியனை போலீசார் தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments