மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் வருகிற 18-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சிகளிலும், பேரூராட்சியிலும் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை நகராட்சியில் வார்டு எண் 1, 2, 3, 4, 11-ல் குடியிருக்கும் பொதுமக்களுக்கு 18-ந் தேதி சமத்துவபுரம், சமுதாயக்கூடத்திலும், வார்டு எண் 7, 8, 9, 10 பகுதியை சேர்ந்தவர்களுக்கு 19-ந் தேதி டவுன் ஹாலிலும், வார்டு எண் 5, 6, 19, 20-ல் வசிக்கும் பொதுமக்களுக்கு 20-ந் தேதி கோவில்பட்டி சமுதாயக்கூடத்திலும், வார்டு எண் 21, 22, 23 பகுதி மக்களுக்கு 21-ந் தேதி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியிலும், வார்டு எண் 15, 16, 17, 18-ல் குடியிருக்கும் பொதுமக்களுக்கு 22-ந் தேதி பழைய நகராட்சி அலுவலகத்திலும், வார்டு எண் 24, 25, 36, 37, 38 பகுதியை சேர்ந்தவர்களுக்கு 26-ந் தேதி வைரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிலும் நடைபெற உள்ளது.

அறந்தாங்கி

இதேபோல் வார்டு எண் 26, 34, 35, 39 பகுதியை சேர்ந்தவர்களுக்கு 27-ந் தேதி பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வார்டு எண் 12, 13, 14, 29, 30, 31 பகுதிக்கு 28-ந் தேதி காமராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், வார்டு எண் 40, 41, 42-க்கு வருகிற 29-ந் தேதி அசோக் நகரில் உள்ள சமுதாய கூடத்திலும், வார்டு எண் 27, 28, 32, 33 பகுதிக்கு வருகிற 2-ந் தேதி மார்த்தாண்டபுரம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது. மேலும் அறந்தாங்கி நகராட்சியில் வார்டு எண் 3, 4, 5, 6, 7, 8, 9-ல் குடியிருக்கும் பொதுமக்களுக்கு 18-ந் தேதி ராஜேஸ்வரி மஹாலிலும், வார்டு எண் 16, 24, 25, 26 பகுதிக்கு 19-ந் தேதி அறந்தாங்கி நகராட்சி மணிவிளான் 5-வது தெரு எம்.ஆர். மஹாலிலும், வார்டு எண் 20, 21, 22, 27-க்கு வருகிற 20-ந் தேதி எல்.என்.புரம், ராமகாந்தி மஹாலிலும், வார்டு எண் 1, 2, 13, 14, 15-க்கு வருகிற 22-ந் தேதி சக்கரவர்த்தி மஹாலிலும், வார்டு எண் 12, 18, 19-க்கு 28-ந் தேதி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும், வார்டு எண் 17, 23-ல் வசிப்பவர்களுக்கு 29-ந் தேதி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும், வார்டு எண் 5, 6, 7-க்கு வருகிற 2-ந் தேதி நகராட்சி, டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

பேரூராட்சி

வருகிற 18-ந் தேதி ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட (வார்டு 1 முதல் 15 வரை) பொதுமக்களுக்கு ஆலங்குடி டவுன் அருள் திருமண மஹாலிலும், பொன்னமராவதி பேரூராட்சிக்குட்பட்ட (வார்டு 1 முதல் 15 வரை) பொதுமக்களுக்கு வலையப்பட்டி, வலம்புரி நாதசுவாமி வடக்கு தெரு, நகரத்தார் திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது. அன்னவாசல் பேரூராட்சிக்குட்பட்ட (வார்டு 1 முதல் 15 வரை) பொதுமக்களுக்கு 19-ந் தேதி அன்னவாசல் பேரூராட்சி, சிவன்கோவில் அருகில், சன்னதி தெரு சமுதாய கூடத்திலும், இலுப்பூர் பேரூராட்சிக்குட்பட்ட (வார்டு 1 முதல் 15 வரை) பொதுமக்களுக்கு 21-ந் தேதி சுபாசீ திருமண மஹாலிலும், கறம்பக்குடி பேரூராட்சிக்குட்பட்ட (வார்டு 1 முதல் 15 வரை) பொதுமக்களுக்கு 22-ந் தேதி ராஜ சங்கீதா திருமண மஹாலிலும், அரிமளம் பேரூராட்சிக்குட்பட்டவர்களுக்கு (வார்டு 1 முதல் 15 வரை) 26-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கீரமங்கலம் பேரூராட்சியில் 27-ந்தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கீரனூர் பேரூராட்சியில் 29-ந் தேதி திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோடு ஓ.எஸ்.பி. திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது.

ஊராட்சிகள்

குமாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு 28-ந் தேதி குமாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், மாத்தூர் ஊராட்சிக்குட்பட்டவர்களுக்கு வருகிற 2-ந் தேதி மாத்தூர் சமூதாயக்கூடத்திலும் நடைபெற உள்ளது. முகாமில் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக தேவையான ஆவணங்களுடன் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments