பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டையில் பிப்ரவரி 2-ந் தேதி தொடங்குகிறது
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் பிப்ரவரி 2-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடைபெறுகிறது.

விளையாட்டு போட்டிகள்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 3-வது மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப்போட்டிகள் புதுக்கோட்டையில் பிப்ரவரி மாதம் 2-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிக்கான முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா தலைமை தாங்கி கூறியதாவது:-

மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கால்பந்து, ஆக்கி, கைப்பந்து, டென்னிஸ், இறகு பந்து, எறிபந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. 38 மாவட்டங்களை சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.

அடிப்படை வசதிகள்

போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்குமான உணவு, தங்குமிடம், குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிக்கான முன்னேற்பாடுகளையும் சிறப்பாக செய்து புதுக்கோட்டைக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜூ, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி உள்பட போட்டி நடைபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments