மணமேல்குடி அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மறியல்




மணமேல்குடியில் தாண்டவமூர்த்தி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால் தாண்டவமூர்த்தி நகர் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலை கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமநாதன் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணி, சப்-இன்ஸ்பெக்டர் நாபீக் இப்ராஹிம், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்ற மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments