கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பூங்காவை சுத்தம் செய்த பழைய காலனி இளைஞர்கள்




கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம்  பூங்காவை  பழைய காலனி இளைஞர்கள்
சுத்தம் செய்தனர் 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் பழைய காலனி உறவுகள் சார்பில் காட்டுக்குளம் பகுதி குப்பை மேட்டை தோட்டமாக மாற்ற மரக்கன்றுகளை  கடந்த 29 டிசம்பர் 2021 புதன்கிழமை  அன்று 20-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை  வளரும் இளைய தலைமுறைகள்  நட்டனர். இதில்  இளைஞர்கள், பெரியவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் மரக்கன்றுகளை விதைத்தனர். 

கடந்த சில நாட்களாக பூங்கா பராமரிப்பு இன்றி காணப்பட்டு வந்தது இந்நிலையில் நேற்று முன்தினம் டிசம்பர் 26 பழைய காலணி இளைஞர்கள் ஜேசிபி மூலமாக சுத்தம் செய்தனர்

இப்போது பூங்கா பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது 

மேலும் இதற்காக பொருளாதாரம், உடல்  உழைப்பு , பங்களிப்பு வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும், குடும்பத்தார்களுக்கும் பழைய காலனி இளைஞர்கள் & GPM மீடியா சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.


ஒரு சில ஊர்களில் உள்ள இளைஞர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் இந்த காலகட்டத்தில் ஊர் நலனை கருத்தில் கொண்டு  சுகாதாரமான சுற்றுசூழலை உருவாக்கிட செயல்படும்  ஊர் பெரியவர்கள், இளைஞர்களுக்கு, சிறுவர்கள் (வருங்கால தலைமுறைகள்) GPM மீடியா சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

நமது ஊரை பசுமையாக ஊராக மாற்ற ஊர் நலனை கருத்தில் கொண்டு  சுகாதாரமான சுற்றுசூழலை உருவாக்கிட நாம் அனைவரும் ஒற்றுமையாக மரத்தை வளர்ப்போம்.

நமது ஊர் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த வெளிநாடு வாழ்,வெளியூர் வாழ் மற்றும் உள்ளூர் வாழ் சகோதரர்கள் தங்கள் குடும்ப உறவுகளிடம் இந்த செய்தியை பகிர்ந்து அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!

மரம் வளர்ப்பு பற்றி  நபி மொழி மரம் நடுவது ஒரு முஸ்லிமின் பொறுப்பு

மரம் நடுவதை, இஸ்லாம் நன்மையாக கணக்கீடு செய்து, தர்மமாக ஊக்குவிக்கின்றது. முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி).









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments