SSS ஹூப்ளி - ராமேஸ்வரம் வாரந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு ,என தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ராமேசுவரத்தில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலின் சேவை வருகிற 30-ந் தேதியுடன் முடிகிறது இதற்கிடையே, இந்த ரெயில் சேவையை இருமார்க்கங்களிலும் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது பாம்பன் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த ரெயில்கள் ராமநாதபுரம் வரை மட்டும் இயக்கப்படுகின்றன.
ஹூப்ளி - இராமேஸ்வரம் (இராமநாதபுரம்)
அதன்படி, ஹூப்ளி-ராமேசுவரம் சிறப்பு ரெயில் வருகிற ஜனவரி 06ந் தேதி முதல் மார்ச் மாதம் 30-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது .
இந்த ரெயில் (வ.எண்.07355) சனிக்கிழமை தோறும் ஹூப்ளியில் இருந்து அதிகாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு ராமநாதபுரம் ரெயில் நிலையம் வந்தடைகிறது.
இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) - ஹூப்ளி
வருகிற 31-ந் தேதியுடன் முடிவடையும் ராமேசுவரம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் சேவை வருகிற ஜனவரி 7-ந் தேதி முதல் மார்ச் மாதம் 31ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.07356) ராமநாதபுரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி ரெயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன 3 அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படுகிறது
இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பென்னுரு, ஹரிஹார், தேவனஹரி, சிக் ஜாஜுர், பிரூர் அரிசிகரே, தும்கூர், எஸ்வந்த்பூர் (பெங்களூரு), பனஸ்வாடி,(பெங்களூரு), ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
வரும் வாரத்துடன் இந்த சிறப்பு ரயில் சேவை நிறைவு பெறவுள்ள நிலையில் மேலும் 3 மாத காலத்திற்கு நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.