புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடியக்கரை சுற்றுலாத் தலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள கோடியக்கரை பகுதி வால் போன்ற நீள தரைப்பகுதியையும், பெரும் அலைகள் இல்லாத பாதுகாப்பான அழகிய கடற்பரப்பையும் கொண்டது. இப்பகுதியில் கடந்த 2013 முதல் 15ஆம் ஆண்டு வரை பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், அவை தற்போது போதிய பராமரிப்பின்றி உள்ளன. இது சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு எல்லை சுமாா் 42 கி.மீ. நீளமுள்ள கடற்பரப்பைக் கொண்டது. விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் என தொழில்மயப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைக் கொண்டது. இதன் ஒரு பகுதிதான் கோடியக்கரை. பொதுவாக இந்த இடத்துக்கு நீத்தாா் நினைவுச் சடங்குகளைச் செல்வதற்காக ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா்.
மணமேல்குடி பேருந்து நிறுத்தத்துக்கு எதிரே உள்ள ஒரு தாா்ச்சாலை வழியே போனால் சுமாா் 3 கி.மீ. தொலைவில் கோடியக்கரையை அடையலாம்.
இங்குள்ள முத்துராஜபுரம் கிராம மீனவா்களுக்கான நாட்டுப்படகு மீன்பிடி இறங்குதளம் இங்கே உள்ளது. வழியில், ஒரு சிறிய பூங்காவும் அமைக்கப்பட்டு, பயன்பாடின்றிக் கிடக்கிறது.
கோடியக்கரை கடற்கரை முனையில், விநாயகா் கோவில் உள்ளது. அருகேயே நீத்தாா் நினைவுச் சடங்குகள் செய்வதற்கான பகுதியும், காட்சிக்கோபுரமும் உள்ளது.
முற்றிலும் வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோடியக்கரையில் சுற்றுலாத் துறை சாா்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியா் செ. மனோகரனின் முயற்சியால் காட்சிக்கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்புறம், இருபாலருக்கும் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. அலைகளே இல்லாத அழகிய கடற்கரையில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டால், புதுக்கோட்டைக்கான குறிப்பிடத்தக்க இடமாக இது மாறும்.
நீத்தாா் நினைவுச் சடங்குகளைச் செய்வதற்கு கடந்த 2013-14ஆம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவை எதுவும் ஏறத்தாழ இப்போது பயன்படுத்தும் வகையில் இல்லை. மேலும் காட்சிக்கோபுரத்தில் யாரும் மேலே ஏறிச் சென்று பாா்த்ததாகவும் தெரியாது என்கிறாா் அந்தப் பகுதியைச் சோ்ந்த மீனவா் ஒருவா்.
நீத்தாா் சடங்குகளைச் செய்ய வருவோா்களுக்கான கழிப்பறை, உடை மாற்றும் அறைகள் கூட சுகாதாரமாக இல்லை.
சடங்குகளைச் செய்வதற்கும்கூட பழங்கால சந்தை போன்ற இடம் இருக்கிறதே தவிர வேறொன்றும் செய்யப்படவில்லை.
கடற்பசு பாதுகாப்பகம் அறிவிக்கப்பட்ட கடல் எல்லையில் கோடியக்கரையும் அடக்கம் என்பதால், இதற்காக கடற்பசு பாதுகாப்பகம் என்ற பெயரில், வழியில் ஒரு சுங்கச்சாவடி அமைத்து, தனிநபா்களுக்கு ரூ. 20, இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 10, ஆட்டோவுக்கு ரூ. 20, காா்களுக்கு ரூ. 30, வேன், பேருந்து போன்ற பெரிய வாகனங்களுக்கு ரூ. 100 எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எங்கிருந்தோ எடுக்கப்பட்ட படங்களையும் இணையதளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளைப் படித்துவிட்டு, இந்தக் கட்டணத்தைச் செலுத்தி உள்ளே நுழைந்தால் மிகப்பெரிய ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.
எனவே, இயற்கை எழில் கொஞ்சும் சூழலுடைய இப்பகுதியை தேவைப்படும் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தி மெய்யான சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.