மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா




முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு  பாராட்டு விழாவினை மணமேல்குடி  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  ஜீவானந்தம் அவர்கள் தலைமை தாங்கினார்.

 மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன் மற்றும் இந்திராணி வட்டார வளவய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

இந்நிகழ்வில் புதுக்கோட்டை  மாவட்டம்  அறந்தாங்கி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர்  ஜெயந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து மகிழ்வித்தார்கள்.

. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு புத்தகங்களை வழங்கி கௌரவித்தார்கள்.

இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் வேல்சாமி மற்றும் முத்துராமன் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் அவர்கள் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments