தொண்டி அருகே விசைப்படகில் எந்திர கோளாறால் நடுக்கடலில் தவித்த 6 மீனவர்கள் மீட்பு
விசைப்படகில் எந்திர கோளாறால் நடுக்கடலில் தவித்த 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

என்ஜின் பழுது

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள சோளியக்குடியை சேர்ந்த மீனவர் நாராயணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று காலை 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நடுக்கடலில் இந்த விசைப்படகு என்ஜின் திடீரென பழுதாகிவிட்டது. அதில் இருந்த 6 மீனவர்கள் தவித்தனர்.

கடலோர போலீசார் மீட்டனர்

இதுகுறித்து அந்த மீனவர்கள் விசைப்படகில் இருந்தபடி மீன்வளத்துறை மற்றும் தொண்டி கடலோர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தொண்டி கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் மற்றொரு படகில் விரைந்து சென்றனர். நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்த கடலோர போலீசாரை மக்கள் பாராட்டினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments